கள்ளக்காதலனுடன் உல்லாசம்; இடையூறாக இருந்த கணவன், 22 வயது மகளை கொன்ற பெண்

கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.
திருப்பதி,
தெலுங்கானா மாநிலம், பூபால பள்ளி மாவட்டம், ஒடிதலா கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 58). இவரது முதல் மனைவி இறந்த பிறகு தடிசர்லாவை சேர்ந்த கவிதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்கு வர்ஷினி, ஹன்சிகா என 2 மகள்கள் இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் பெற்றோருடன் வசித்து வந்தார்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை விடுமாறு குமாரசாமி மனைவியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.கள்ளக்காதலுக்கு இடையூராக உள்ள கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்தார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார்.கவிதா கணவரின் கால் களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.பின்னர் கணவர் உடல்நலகுறைவால் இறந்து விட்டதாக நாடகமாடினார். இதனையடுத்து குமாரசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் இருந்த தந்தை எப்படி திடீரென இறந்து விட்டார்.ராஜ்குமார். ஏன் அடிக்கடி நமது வீட்டிற்கு வந்து செல்கிறார் என வர்ஷினி தாயிடம் கேள்வி எழுப்பினார்.கணவர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பியதால் மகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்தார்.அதன்படி கடந்த மாதம் 2-ந் தேதி வர்ஷினி நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது கவிதா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
மகளின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் முள்புதரில் பிணத்தை வீசினர். மகள் காணாமல் போனதாக சித்யாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கள்ளக் காதலன் ராஜ்குமார் கடந்த மாதம் 25-ந் தேதி முள்புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார். பின்னர் பிணத்தை தனது பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்றார். சாலையோரம் வர்ஷினியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் உடலை சுற்றியிலும் பூக்களை தூவினார். ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயன்றனர்.
மேலும் வர்ஷினியின் பிணத்தின் அருகே ஆதார் அட்டையை வீசிவிட்டு வந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதார் அட்டை அடையாளத்தை வைத்து கவிதாவுக்கு போன் செய்து வரவழைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா யாரோ தனது மகளை கொலை செய்து விட்டதாக கதறி துடித்து நாடகம் ஆடினார். கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையின் போது கவிதா தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் சேர்ந்து கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மகளை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜ்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






