குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் நாளை பதவி ஏற்கிறார் - விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு

பதவியேற்பு விழாவில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் நாளை பதவி ஏற்கிறார் - விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு
Published on

காந்திநகர்,

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து நாளை குஜராத் முதல் - மந்திரியாக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்கிறார். காந்திநகரில் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில்  மத்திய பாதுகாப்பு மந்திரி  ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com