பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் இன்று இரவு சந்தித்தார்.
பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இரவு சந்தித்தார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com