பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் அன்னிய முதலீடுக்கு அனுமதி - பிரதமர் மோடி

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் அன்னிய முதலீடுக்கு அனுமதி - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி மீதான கட்டுப்பாடு விரிவுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு தொடர்பான இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:-

பல ஆண்டுகளாக, அதிகளவு பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.பாதுகாப்பு உற்பத்தியில் 74 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

"இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நட்பு நாடுகளுக்கு இந்தியா நம்பகமான ஆயுத சப்ளையராக இருக்க முடியும். பிராந்தியத்தில் நிகர பாதுகாப்பு வழங்குநராக இந்தியாவின் நிலையை அரசாங்கம் பலப்படுத்தும் என கூறினார்.

பாதுகாப்புத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் கூறும் போது பாதுகாப்பு உற்பத்தியில் நாட்டை தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதற்காக அடுத்த தலைமுறை இராணுவ தளங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்குவதில் உள்நாட்டுத் துறையை கைகோர்த்துக் கொள்ள இந்தியாவின் ஆயுதப்படைகள் உறுதிபூண்டுள்ளன என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com