ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகப்பெரிய சோகம் ஏற்படலாம் பிரதமர் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாட்டி. பெரிய சோகம் ஏற்படலாம் என பிரதமர்ருடனா ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ட்ரிவால் எச்சரிக்கை விடுத்தார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகப்பெரிய சோகம் ஏற்படலாம் பிரதமர் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக "பெரிய சோகம்" ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் அனைத்து ஆக்சிஜன் ஆலைகளையும் ராணுவம் மூலம் கையகப்படுத்த வேண்டும்.

டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் டேங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் வழிநடத்த வேண்டும்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அதிகமானபேர் வேதனையில் உள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகப்பெரிய சோகம் ஏற்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம், ஒருபோதும் நம்மை மன்னிக்க முடியாது. ஆக்சிஜன் டேங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து முதல்வர்களையும் வழிநடத்துமாறு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

"நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு ஒரு தேசிய திட்டம் தேவை. மத்திய அரசு அனைத்து ஆக்சிஜன் ஆலைகளையும் இராணுவத்தின் மூலம் கையகப்படுத்த வேண்டும், மேலும் ஆக்ஸிஜன் ஆலையில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு டேங்கரிலும் இராணுவ துணை வாகனம் இருக்க வேண்டும்.

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து டெல்லிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள ஆக்சிஜன் விமானம் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார்.

மாநில அரசுகளிடமிருந்தும், கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதையும் முதல்வர் ஆட்சேபித்தார், மேலும் ஒரு நாடு, ஒரே விலை கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் மராட்டியம், உத்தரபிரதேசம், கேரளா, சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம் மாநில முதலமைச்சர்களும் அடங்குவர்.

இதற்கிடையில், "கெஜ்ரிவால் பிரதமர்-முதல் அமைச்சர்கள் சந்திப்பு கூட்டத்தை அரசியல் விளையாட்டிற்கு பயன்படுத்தினார்" என்று மத்திய அரசின் வட்டாரங்கள் குற்றம் சாட்டி உள்ளன.

ஆக்சிஜனை விமானத்தில் ஏற்றிச்செல்ல வேண்டுமென கூறினார். ஆனால் அது ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது என்று அவருக்கு தெரியவில்லை. ரெயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பற்றி அவர் பேசினார், ஆனால் ரெயில்வேக்கு இது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று ரெயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

கூட்டத்தை தடுப்பூசி விலை குறித்து பொய்களை பரப்ப அவர் தேர்வு செய்தார் . மத்திய அரசு ஒரு தடுப்பூசி விலையை தன்னுடன் வைத்திருக்காது, மாநிலங்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் அறியவில்லை. அனைத்து முதல் அமைச்சர்களும் நிலைமையை மேம்படுத்த அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி பேசினர். இருப்பினும், கெஜ்ரிவால் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எதுவும் பேசவில்லை, "என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com