பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்

பீகார்: சமையலறையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலியானார்கள்; 5 பேர் காயம் அடைந்தனர்.
பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்
Published on

மோதிஹரி:

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை தொண்டு நிறுவனத்தின் சமையலறையில் தொழிலாளர்கள் பல பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் ஒருவர் மட்டும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com