பீகார்: கங்கையில் நீராடியபோது 4 பேர் நீரில் மூழ்கி பலி

உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்
பீகார்: கங்கையில் நீராடியபோது 4 பேர் நீரில் மூழ்கி பலி
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நயா டோலா கிராமத்தை சேர்ந்தவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதிக்கு சென்றுள்ளனர். மொத்தம் 11 பேர் ஆற்றில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் 7 பேர் பத்திரமாக நீந்தி கரையை சேர்ந்தனர். எனினும், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com