பீகார் படகு விபத்து; குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த துயரம்

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பீகார் படகு விபத்து; குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த துயரம்
Published on: 

வைஷாலி

பீகாரில் படகு விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த துயரம் ஏற்பட்டு உள்ளது.

பீகாரின் ரகோபூர் தொகுதிக்குட்பட்ட ராம்பூர் சியாம்சந்த் கிராமம் அருகே விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக நேற்று படகு ஒன்றில், பலர் புறப்பட்டு சென்றனர். படகில் பயணம் செய்தவர்களில் பலர் குழந்தைகள் ஆவர்.

படகு விபத்து

இந்த நிலையில், கங்கை ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில், குழந்தைகள் உட்பட பலர் நீரில் மூழ்க தொடங்கினர்.

சம்பவம் பற்றி அறிந்ததும், விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் குழு விரைந்தது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆற்றில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் உள்ளூர் கிராம மக்களும் இணைந்து ஈடுபட்டனர். இதில், படகு உரிமையாளர் உட்பட 7 பேர் மீட்கப்பட்டனர். எனினும், விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com