உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி: பீகார் துணை முதல் மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி அளிப்பதாக பீகார் துணை முதல் மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி: பீகார் துணை முதல் மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

பாட்னா,

பாலிவுட்டில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு மர்மமாக உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறி வருகிறார்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு பாலிவுட் மாஃபியா கும்பல் நெருக்கடி கொடுப்பதாக பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சுஷில் குமார் மோடி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் உள்ள பாலிவுட் மாஃபியா கும்பலின் நெருக்கடியில் உத்தவ் தாக்கரே உள்ளார். இதன் காரணமாகவே சுஷாந்த் மரணத்தில் தொடர்புடையவர்களை காப்பாற்ற வளைந்து கொடுக்கிறார் என்று சாடியுள்ளார்.

முன்னதாக, சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த மும்பை சென்றுள்ள பாட்னா போலீஸ் குழுவுக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று சுஷில் குமார் மோடி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது உத்தவ் தாக்கரே மீதே விமர்சனத்தை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com