அடுத்த மாதம் முதல் வாரத்தில் பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு

FILEPIC
2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா. ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.243 தொகுதிகளை கொண்ட அங்கு சட்டசபை பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதியை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் - வாரத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் - 28-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை நடை பெற்றது.
ஆளும் ஐக்கிய ஜனதா - தளம், பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 243 தொகுதிகளில் பா.ஜ.க.- ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் 100-102 தொகுதிகள் வரை போட்டியிட ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டுஉள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் எல்.ஜே.பி. (ராம் விலாஸ்) கட்சிக்கு கணிசமான தொகுதிகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுக்க ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். அதற்காக ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்ட னர். இந்த கூட்டணியில் 15 முதல் 20 தொகுதிகள் வேண்டும் என்று ஜிதன்ராம் மாஞ்சி வலியுறுத்தி வருகிறார்.
ஐக்கிய ஜனாதாதளம்-பா. ஜனதா கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.). காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இந்த விகாஷீல் கூட்டணியில் இடது சாரிகள், இன்சான், ராஷ்டீரிய லோக் ஜனசக்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி இடையே தொகுதி பங்கீடு, பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் இருக்கிறது. பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தியின் பேரணி தங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சி யான மகாபந்தன் கூட்டணி நம்பிக்கை யுடன் இருக்கிறது.






