பீகார்: சட்டவிரோத பட்டாசு உற்பத்தி; வெடிவிபத்தில் 5 பேர் பலி

வெடி விற்பனையாளர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 தொழிலாளர்களும் பலியானவர்களில் அடங்குவர்.

பீகார்:  சட்டவிரோத பட்டாசு உற்பத்தி; வெடிவிபத்தில் 5 பேர் பலி
Published on: 

பாட்னா

பீகார் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 அடுக்குமாடிகள் கொண்ட ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி நடந்து வந்தது. அங்கு ஏராளமான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

5 பேர் பலி

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, 3 பேர் காயம் அடைந்தனர்.

ஆனால், காயம் அடைந்தவர்கள் யாரும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அம்ருதின் அஹமது (வயது 70), முஸ்கல் சித்திக் (வயது 20), குஷ்பு சித்திக் (வயது 10), அர்ஷத் சித்திக் (வயது 10), ராஜ்குமார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் வெடி விற்பனையாளர் ஆவார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 தொழிலாளர்களும் பலியானவர்களில் அடங்குவர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com