பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு

பீகார் மாநிலம் மதரசாவில் குண்டுவெடிப்பு நடந்தது.
பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு
Published on

பாட்னா,

பீகாரின் பாங்கா மாவட்டத்தில், ஒரு மசூதியுடன் இணைந்த, மதரசா கட்டிடத்தில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பால் கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

குண்டுவெடித்தபோது ஒருவரும் அந்த வளாகத்தில் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com