ஓடும் ரெயிலில் இருந்து மற்றொரு ரெயிலில் சென்ற பயணிகளை பெல்ட்டால் தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ

பீகாரில் ஒருவர் ஒரு ரெயிலின் வாசலில் இருந்து கொண்டு மற்றொரு ரெயிலில் சென்ற பயணிகளை பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரெயிலில் இருந்து மற்றொரு ரெயிலில் சென்ற பயணிகளை பெல்ட்டால் தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ
Published on

பீகார்,

பீகாரில் ஒருவர் ஒரு ரெயிலின் வாசலில் இருந்து கொண்டு மற்றொரு ரெயிலில் சென்ற பயணிகளை பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ஓடும் ரெயிலின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், அடுத்த தண்டவாளத்தில் செல்லும் ரெயிலின் வாசலில் அமர்ந்திருக்கும் பயணிகளை பெல்ட்டால் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர், "இந்த நபர் மற்றொரு ரெயிலில் வாசலில் அமர்ந்திருப்பவர்களை பெல்ட்டால் அடிக்கிறார், இது சரியா? இவர் பெல்ட்டால் அடிப்பதால், அவர்கள் ரெயிலில் இருந்து கீழே விழுந்து, பெரிய விபத்தும் நேரிடலாம். தயவு செய்து இது போன்ற சமூக விரோத பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள கிழக்கு மத்திய ரெயில்வே, "தகவலுக்கு நன்றி. அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com