

வாரங்கல்,
தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த மே 20ஆம் தேதி சாக்கு குடோனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளி சஞ்சய்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.