பீகார் கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் சிவில் கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கோர்ட்டு பதிவாளர் அலுவலத்திற்கு இன்று மர்ம இமெயில் வந்தது. அந்த இமெயிலில் கோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கோர்ட்டு வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com