வினாத்தாள் கசிந்தது: பீகாரில் போலீஸ் தேர்வு ரத்து

பீகாரில் வினாத்தாள் கசிந்ததால் போலீஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்காக 21,391 காலியிடங்களை நிரப்ப அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 37 மாவட்டங்களில் 529 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

ஆனால் இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இதுவரை 21 மாவட்டங்களில் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மற்றும் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 148 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com