கொரோனா எதிரொலி: பீகாரில் 1- 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடல்

கொரோனா பரவல் எதிரொலியாக : பீகாரில் 1- 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், பீகாரிலும் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. மேலும், 9-ஆம் வகுப்பு முதல் உயர் படிப்பு வரை படிக்கும் மாணவர்கள் 50 சதவீத இருக்கையுடன் நேரடி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இந்த தகவல் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அரசால் வெளியிடப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com