பீகார்: மருத்துவமனையில் திடீர் மின் தடை; செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை

இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பீகார்: மருத்துவமனையில் திடீர் மின் தடை; செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் ரோஸ்தாஸ் மாவட்டம் சசராம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று மாலை நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர்.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை

அப்போது திடீரென மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டது. மேலும், அவசரகால ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது.

மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com