பீகார்: ரெயில் நிலையத்தில் திடீரென வெடித்த போராட்டம்

தற்போது நிலைமை முற்றிலும் அமைதியாகி, பாதிக்கப்பட்ட ரெயில் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.
பாடலிபுத்ரா ரெயில் நிலையம்
Published on

பட்னா,

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு துறை உட்பட (4,210 பணியிடங்கள்) காவல்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வு மாநிலத்தின் 38 மாவட்டங்களில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

பாடலிபுத்ரா ரெயில் நிலையம்

பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் ரெயில்கள் வராத நிலையில் ஆத்திரமடைந்த தேர்வர்கள், ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில தேர்வர்கள் ரெயிலை சேதப்படுத்தியும், போலீசார் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

மோசமடைந்தது

அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் முயன்றபோது நிலைமை மேலும் மோசமடைந்தது. கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது

ரெயில் பாதையில் போராட்டம் நடத்தியவர்களை அகற்றி, ரெயில் சேவையை மீண்டும் தொடங்க ரெயில்வே பாதுகாப்பு படையும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது நிலைமை முற்றிலும் அமைதியாகி, பாதிக்கப்பட்ட ரெயில் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com