அரசுப்பள்ளியில் உடல் அசதியால் குட்டி தூக்கம் போட்ட ஆசிரியை; விசிறி விடும் மாணவி - வைரலாகும் வீடியோ!

இந்த ஆசிரியையின் தூக்கத்தை ரகசியமாக ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளியில் உடல் அசதியால் குட்டி தூக்கம் போட்ட ஆசிரியை; விசிறி விடும் மாணவி - வைரலாகும் வீடியோ!
Published on

பாட்னா,

பீகாரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கடும் சோர்வு காரணமாக சற்று நேரம் அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, மாணவி ஒருவர் கைவிசிறி கொண்டு அவருக்கு விசிறி விடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பள்ளியில் அனைத்து குழந்தைகளும் படித்துக் கொண்டிருப்பதையும், அந்த ஆசிரியை நாற்காலியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஒரு மாணவியை தனது தூக்கத்துக்கு உதவும் வகையில், கைவிசிறியால் வீச சொல்லியிருப்பார் எனத் தெரிகிறது. ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிக வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோ பீகாரில் ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ 'பாட்பீகார்கி' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியை உடல்நலக் குறைவால் கடும் சோர்வு காரணமாக சற்று நேரம் அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. பள்ளியில் நடைபெற்ற இந்த செயல் கண்டனத்திற்கு உரியது.

பீகார் மாநிலம், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பகாஹி புரைனா கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பபிதா குமாரி என அடையாளம் காணப்பட்ட அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, "எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தான், நாற்காலியில் அமர்ந்து சிறிதுநேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். வேண்டுமென்றே செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த ஆசிரியை உடல்நலக் குறைவால் கடும் சோர்வு காரணமாக சற்று நேரம் அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டதாக கூறினாலும், பள்ளியில் நடைபெற்ற இந்த செயல் கண்டனத்திற்கு உரியது.

ஆனால், இந்த வீடியோ வெளியானதும் அதை பார்த்த பலரும், அந்த ஆசிரியையின் உண்மை நிலையை பற்றி அறிந்திடாமல், வேண்டுமென்றே அவர் அப்படி நடந்துகொண்டார் என்று எண்ணி, அவரை கடுமையாக கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com