பீகாரில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 7 பேர் பலி

அவர்களில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மலா தேவி என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
பீகாரில் சோகம்:  கோவிலில் கூட்ட நெரிசல்; 7 பேர் பலி
Published on

லக்கிசராய்

பீகாரில் சிவன் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர். அப்போது, மின்சார ஒயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறி ஓடினர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மலா தேவி என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்ற 3 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com