பீகார்: தண்டவாளங்களை கடக்க முயன்ற போது ரெயில் மோதி பெண்கள் 2 பேர் பலி

பராக்கா எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த இரு பெண்கள் மீதும் மோதியது.
பீகார்: தண்டவாளங்களை கடக்க முயன்ற போது  ரெயில் மோதி பெண்கள் 2 பேர் பலி
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியை சேர்ந்த நந்த்லால் சிங்கின் மனைவியான 62 வயது இந்தர் தேவி, மற்றும் தனது மருமகளான 45 வயது சங்கீதா தேவியை ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காக, இந்தர் தேவி பக்தியார்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். இந்த நிலையில் அதே ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு நபர் அவர்களுக்கு தண்டவாளத்தை கடக்க உதவுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் கடைசி வினாடியில் பிளாட்பாரத்தில் ஏறி தப்பினார். ஆனால், டெல்லியில் இருந்து மால்டா டவுன் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த பராக்கா எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த இரு பெண்கள் மீதும் மோதியது.

விபத்து நடந்த உடனேயே ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சோகமான சம்பவம் அந்த ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com