பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ; தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஏற்கனவே 11 ஆவணங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு இருந்தது
புதுடெல்லி,
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களில் தகுதியானவர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஏற்கனவே 11 ஆவணங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு இருந்தது. 12-வது ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, 12-வது ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ளுமாறு பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது. அதிகாரிகள் ஏற்க மறுப்பது தீவிர பிரச்சினையாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story






