நடிகை நயன்தாரா புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

பீகாரில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி நடிகை நயன்தாரா புகைபடத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை காதல் வலையில் வீழ்த்தி பிடித்து உள்ளார்.
நடிகை நயன்தாரா புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி
Published on

பாட்னா

பாரதீய ஜனத அமைச்சர் ஒருவரின் மொபைல் போனை திருடி ஒரு பயங்கரமான கும்பல் பயன்படுத்தி வந்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி அந்த கும்பலில் உள்ள ஒருவரை காதலிப்பதாக பொய் கூறி அந்த கும்பலையே பிடித்து உள்ளார்.

அந்த பெண் போலீஸ் அதிகாரி நயந்தாரா படத்தை அந்த கும்பலிடம் காட்டி தான் நம்ப வைத்து உள்ளார். பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தர்பங்கா மாவட்டம் போலீசில் உள்ள பெண் அதிகாரிதான் இந்த சாகசத்தில் ஈடுபட்டார்.

பாரதீய ஜனதா தலைவர் சஞ்சய் குமார் மகோதன் என்பவரின் விலையுயர்ந்த மொபைல் ஒன்று தி \ருட்டு போனது இதனை முகம்மது ஹஸ்னைன் என்ற திருடன் திருடி உள்ளான்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பொறுப்பு பெண் போலீஸ் அதிகாரி மதுபாலா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் பல சந்தர்ப்பங்களில் முகம்மது ஹஸ்னைனை பிடிக்க முயற்சி செய்தனர் ஆனால் அவன் தப்பித்து கொண்டே இருந்தான்.

திருடப்பட்ட மொபைலின் அழைப்பு விவரம் பதிவுகள் (சி.டி.ஆர்) ஒரு நெருக்கமான ஆய்வுக்கு பின் ஹஸ்னைன் தான் அந்த மொபைல் போனை பயன்படுத்துவதாக போலீஸ் அதிகாரி மதுபால முடிவு எடுத்தார்.

இதை தொடர்ந்து போலீஸ் பெண் அதிகாரி அவனை திட்டம் போட்டு பிடிக்க எண்ணினார். இதனால் அவனை காதலிப்பதாக சொல்லி அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொள்ள தொடங்கினார். ஆனால் முதலில் அவன் அதனை ஏற்று கொள்ள வில்லை ஆனால் நாளடைவில் அவன் காதல் வலையில் வீழ்ந்தான்.

ஒரு வழியாக ஹஸ்னைன் தனது காதலை போலீஸ் அதிகாரியிடம் கூறினான். போட்டோ ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனால் மதுபாலா தனது புரோபைல் படத்தில் நடிகை நயந்தாரா படத்தை வைத்து இருந்தார். அதனை அனுப்பி வைத்து உள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு மகிழ்ச்சியானான அவன் காதலில் பைத்தியமானான். டர்பங்கா நகரத்தில் ஒரு இடத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டான்.

குறிப்பிட்ட இடத்தில் காதலியை சந்திக்க ஹஸ்னைன் வந்தபோது அங்கு மாறு வேடத்தில் மரைந்து இருந்த போலீசார் அவன் மீது பாய்ந்து அவனை கோழி அமுக்குவது போல் அமுக்கினர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒரு புர்க்காவை அணிந்து வந்துள்ளார் இதனால் ஹஸ்னைன் அவரை அடையாளம் காணத் தவறிவிட்டார், இதனால் தான் அவர் பிடிபட்டார்.

முகம்மது ஹஸ்னைன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஆனால் மற்றொரு கிரிமினலிடமிருந்து 4,500 ரூபாய்க்கு அவர் வாங்கியதாகக் குறிப்பிட்டார். அந்த தகவலைப் பயன்படுத்தி, மற்ற குற்றவாளிகளையும் விரைவில் போலீசார் கைது செய்தனர்.

பீகாரின் பீலீஸ் துறை மதுபாலா தேவியின் கூர்மையான சிந்தனை மற்றும் அணுகுமுறைக்கு ஒரு வெகுமதி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com