பீகார் சட்டசபை தேர்தல்: 203 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு

பீகார் சட்டசபை தேர்தலில் 203 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல்: 203 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
Published on

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் சமீபத்திய அறிவிப்பாக 203 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை 203.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 102 (பா.ஜ.க. -60, ஜே.டி.யு. - 34, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 4)

மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 93 (ஆர்.ஜே.டி. - 64, காங்கிரஸ் - 16, இடதுசாரிகள் - 13)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 5

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com