கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 April 2025 10:06 AM IST (Updated: 3 April 2025 11:34 AM IST)
t-max-icont-min-icon

6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் ரேபிடோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் போராட்டம் நடத்தினர்,

இந்த நிலையில் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக ஓலா தரப்பில் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு உடனடியாக தடை விதித்து 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்தபின் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

1 More update

Next Story