பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
Published on

புதுடெல்லி,

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். அப்போது 19 வயதான பில்கிஸ் பானு எனும் இளம் பெண் கூட்டு பாலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். மட்டுமல்லாது அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் பானுவின் 3 வயது கைக்குழந்தையும் அடங்கும்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலை செய்யப்பட்டது குறித்து பரிசீலிப்பதாக இந்திய தலைமை நீதிபதி சி ஜே ரமணா உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com