அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கும் 'சாந்தி' மசோதா மீது மக்களவையில் இன்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது. அதில், இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்க எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. .
எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குறிப்பிடும்போது, முக்கியமாக, ‘இந்த மசோதா அணுசக்தி ஆற்றல் துறையில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் என்பதால் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும்’ என்றார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களில் ஒன்றான அணுசக்தி மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
Related Tags :
Next Story






