மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகம் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 207 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.
மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகம் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Published on

நாடாளுமன்ற மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து, நடைபெற்ற டிவிஷன் வாக்கெடுப்பில், மொத்தம் 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.

அதில் ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர். பகுதிவாரி வாக்கெடுப்பில் மக்களவையில் மொத்தம் 543 எம்.பிக்களில் 333 எம்.பிக்கள் பட்டன் மூலமாக வாக்களித்துள்ளனர்.

மசோதாக்களை அறிமுகம் செய்ய தேவையான எம்.பிக்கள் ஆதரவு கிடைத்ததையடுத்து, மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com