பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி தொடக்கம்

சமீபத்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில், வளமான, மீள்திறன் கொண்ட, தடையற்ற பிராந்தியம் என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டது.
பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி தொடக்கம்
போர் கப்பல்
Published on: 

புது டெல்லி,

வங்காள விரிகுடா பகுதியில் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்பு பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சி வரும் நவம்பர் 3-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

7 நாடுகள் கூட்டு பயிற்சி

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சியில் பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள 7 உறுப்பு நாடுகளும் இணைந்து பங்கேற்றுள்ளன. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யவும், வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த நாடுகள் தங்களது உறுதியான கூட்டு நிலைப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு பயிற்சி

சமீபத்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில், "வளமான, மீள்திறன் கொண்ட, தடையற்ற பிராந்தியம்" என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, உறுப்பு நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பையும், கூட்டு செயல்பாடுகளையும் மேம்படுத்துவதற்கான ஒரு நடைமுறை கட்டமைப்பாக இந்த பாதுகாப்பு பயிற்சி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.

பார்வையை செயலாக மாற்றுவதற்கான

பரஸ்பர கடல்சார் நலன்களை பாதுகாப்பது மற்றும் பிராந்திய பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், "பார்வையை செயலாக மாற்றுவதற்கான" (Vision into Action) பிம்ஸ்டெக் அமைப்பின் கூட்டு தீர்மானத்தை இந்த பயிற்சி பிரதிபலிப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X