

பாட்னா
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியுள்ளது.
ஏர் இந்தியாவின் AI 1741 விமானம் 164 பயணிகளுடன் டெல்லியில் இருந்து புறப்பட்டு உள்ளது. இன்று காலை 7.44 மணியளவில் தரையிறங்கும் வேளையில் விமானம் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில் , விமான அதிகாரிகள் ஓடுபாதையில் ஆய்வு மேற்கொண்டனர். பறவை மோதல் காரணமாக விமான நிலையத்தின் செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் பயணம் செய்த 164 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.