

புதுடெல்லி,
இந்திய விடுதலைக்காக முன்னின்று போராடிய வீரர்களில் ஒருவர் பகத் சிங். இவரது பிறந்த ஆண்டு தின கொண்டாட்டம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வீரம் நிறைந்த பகத் சிங், ஒவ்வோர் இந்தியரின் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.
அவரது தைரியமிகு தியாகம், எண்ணற்ற மக்களிடையே நாட்டுப்பற்றுக்கான பொறியை பற்ற வைத்தது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது உயரிய கருத்துகளை நினைவுகூர்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.