கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: பேராயரிடம் 8 மணி நேரம் விசாரணை இன்றும் தொடர்கிறது

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் பேராயர் பிராங்கோ மூலக்கல்லிடம் போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர் . இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: பேராயரிடம் 8 மணி நேரம் விசாரணை இன்றும் தொடர்கிறது
Published on

கொச்சின்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயர் இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இது குறித்து இப்போது சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்,

கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைக்கம் டி.எஸ்.பி.கே.சுபாஷ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு முன் பேராயர் மூலக்கல், விசாரணைக்காக நேற்று இரண்டாவது நாளாக ஆஜர் ஆனார். முதல் நாள் 7 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று பேராயரிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இன்று அவரிடம் 3 வது நாளாக போலீசார் விசாரணை நடத்துகிணன்றனர். இன்றுடன் விசாரணை முடிவடைகிறது.

முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பேராயர் பிராங்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை 25-ந்தேதி நடக்கிறது. அவரை கைது செய்வதற்கு எந்த தடையும் தற்போது இல்லை என்றாலும், 25-ந்தேதி வரை போலீசார் கைது நடவடிக்கையை எடுக்கமாட்டார்கள் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பேராயர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு மூலக்கல் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடிதம் எழுதப்பட்ட நிலையில், பேராயர் மூலக்கல்லின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com