மத்திய பிரதேசத்தில் முதல்-அமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி

மோசடி தொடர்பாக மட்டும் 6 புகார்கள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் முதல்-அமைச்சர் விஜய் பெயரில் நூதன மோசடி
Published on

இந்தூர்,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெயரிலான அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி, மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது விஜய்யின் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு நிதியுதவி மற்றும் சிறு தொழில் தொடங்க மானியம் வழங்குவதாகக் கூறி அந்த கும்பல் தொலைபேசியில் பொதுமக்களை தொடர்புகொண்டுள்ளனர்.

இதற்கான பதிவு மற்றும் சரிபார்ப்பு கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்று மோசடி செய் துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மட்டும் 6 புகார்கள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com