பா.ஜ.க. தலைவர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கு வரும்படி பா.ஜ.க.வை சேர்ந்த பலம் வாய்ந்த தலைவர் என்னிடம் கூறினார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைவர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பா.ஜ.க. பேரம் பேசுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர். பாட்டீல் கலபுரகியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வை சேர்ந்த பலம் வாய்ந்த தலைவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கு வருமாறும், தேர்தல் செலவு மற்றும் உரிய பதவியும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

என்னை போல் மேலும் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து அனைத்து அனைத்து தகவல்களையும் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளேன். நான் எக்காரணம் கொண்டும் ஆபரேஷன் தாமரையில் சிக்கமாட்டேன். காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டேன் என கூறினார். இதனால், கர்நாடகாவில் குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபட முயன்றது என்ற குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com