பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும்: மம்தா பானர்ஜி தகவல்

நாடாளுமன்ற நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரியில் தேர்தல் வந்து விடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமராக மோடி 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றார்.

அடுத்த மக்களவை தேர்தல், 2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ,க. தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரணடு பா.ஜ.க. வை வீழ்த்த வியூகம் அமைத்து வருகின்றன. இது பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பிப்ரவரியில் தேர்தல்

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பைகுரியில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் நாடாளுமன்ற மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அடுத்த மக்களவை தேர்தல், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வந்துவிடும். பா.ஜ.க.வின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் தான் நீடிக்கும்.

எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். நான் நமது எல்லையை பாதுகாக்கிற எல்லை பாதுகாப்பு படையினர் எல்லோரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் பா.ஜ.க. நாளையே ஆட்சியில் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் பாரபட்சம் காட்டாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் தங்கள் பணியில் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com