ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சி: பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த்மான்

கட்சி என்பது ஒரு தனிநபரை விடப் பெரியது, வெளியேறிய 6-7 பேர் மட்டுமே பஞ்சாப் ஆகிவிடமாட்டார்கள்
ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சி: பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த்மான்
Published on

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக அவரை சந்திப்பதை ராகவ் சத்தா தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகவ் சத்தாவிடம் இருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர்களில் நானும் ஒருவன். எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்காக நான் அர்ப்பணித்தேன்.

நாங்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுத்தோம். ஆனால், இப்போது கட்சி நேர்மையான அரசியலில் இருந்து விலகிவிட்டது. கட்சி தற்போது ஊழல் மலிந்ததாகவும் சமரசங்களுக்கு உட்பட்டதாகவும் மாறிவிட்டது . ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் 7 பேர் பாஜகவில் இணைய இருக்கிறோம். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பிவிட்டோம்” என தெரிவித்தார்.

ராகவ் சத்தாவின் இந்த அறிவிப்பு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நெதர்லாந்து மற்றும் பின்லாந்துக்கு ஒரு வார கால பயணத்தை முடித்துக்கொண்டு முதல் மந்திரி பகவந்த் மான் இன்று பஞ்சாப் திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்கு எம்.பி.க்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் இருக்கிறார்கள், தொடர்ந்து கட்சியுடன் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். கட்சி என்பது ஒரு தனிநபரை விடப் பெரியது, வெளியேறிய 6-7 பேர் மட்டுமே பஞ்சாப் ஆகிவிடமாட்டார்கள்”என்றார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com