சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது, பா.ஜனதா

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாஜக துவங்கியுள்ளது.
சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது, பா.ஜனதா
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, பா.ஜனதா நேற்று தனது காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியது. திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில், பா.ஜனதா எம்.பி. சரோஜ் பாண்டே உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்து பா.ஜனதா பிரமுகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள்.

போராட்டத்தை வாழ்த்தி பேசிய பா.ஜனதா எம்.பி. பிரகலாத் ஜோஷி, அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனை தடுத்த போலீஸ் அதிகாரி மீது நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை கொண்டு வர வலியுறுத்துவோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com