

திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் வேட்பாளரும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவருமான பி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குருவாயூர் தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக ஒரு 'இந்து எம்.எல்.ஏ' கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், இடது மற்றும் வலதுசாரி முன்னணிகள் இந்து வேட்பாளர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் கோபாலகிருஷ்ணன் தனது முகநூல் வீடியோவில் குற்றம் சாட்டினார்.
பி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த கேரளா மாணவர் சங்கமும் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதுடன், கோபாலகிருஷ்ணனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.