மேற்கு வங்காளத்தில் சுவேந்து அதிகாரி உதவியாளர் சுட்டுக்கொலை: பாஜக கண்டனம்

இதுதான் திரிணமூல் காங்கிரசின் உண்மையான முகம் என பாஜக கூறியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சுவேந்து அதிகாரி உதவியாளர் சுட்டுக்கொலை:  பாஜக கண்டனம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர்

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தனது காரில் அமர்ந்திருந்த சந்திரநாத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்துக்கு வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா, இதுவரை, வன்முறையால் 311 தொண்டர்களை பாஜக இழந்துள்ளது. இதுதான் திரிணமூல் காங்கிரசின் உண்மையான முகம். எந்தவொரு பதிவையும் (டுவீட்) பதிவிடுவதற்கு, அவர்களுக்கு அறநெறியோ அல்லது அரசியல் உரிமையோ துளியும் இல்லை.

இந்த நேரத்தில், இது குறித்து நான் எந்த அரசியல் ரீதியான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. கொலை செய்யப்பட்ட விதம் சாதாரணமானதல்ல. அது பயிற்சி பெற்ற ஒரு துப்பாக்கி சுடும் வீரரால் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு முழுமையான திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன் பின்னரே இதைப் பற்றி பேசுவோம் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com