பிரதமரை அவமதிப்பது காங்கிரஸின் வழக்கம் - நிர்மலா சீதாராமன்

தேர்தல் ஆணையத்திடமும் கார்கேவிற்கு எதிராக பாஜகவினர் புகாரளித்துள்ளனர்.
பிரதமரை அவமதிப்பது காங்கிரஸின் வழக்கம் - நிர்மலா சீதாராமன்
Published on

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ஒரு பயங்கரவாதி என விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பாஜக, கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்திடமும் கார்கேவிற்கு எதிராக பாஜகவினர் புகாரளித்துள்ளனர்

தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்கேவின் விமர்சனம் தொடர்பாக கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: “பிரதமரை அவமதிப்பது காங்கிரஸின் வழக்கம். பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறாகப் பேசுவதை காங்கிரஸ் வழக்கமாக வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்து வருவதன் விரக்தியால் இவ்வாறு பேசுகின்றனர். தேர்தல் ஆணையம் உறுதியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com