

புதுடெல்லி,
சசிகலா புஷ்பா மற்றும் பாஜக நிர்வாகி பாலகணபதி தெடர்பான வீடியே வெளியான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் பாலகணபதிக்கு நேட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்பேது அங்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வந்த பேது சசிகலா புஷ்பாவிடம் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு பெதுச் செயலாளர் பாலகணபதி அத்துமீறியதாக வீடியே ஒன்று இணையத்தில் பரவியது.
இதனிடையே இந்த வீடியே காட்சிகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து பாலகணபதிக்கு நேட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் வரும் 26-ம் தேதிக்குள் இந்த சம்பவம் தெடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய மகளிர் ஆணையமானது தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.