உணவையும், சாதியையும் பாஜக ஒன்றாக கலக்குகிறது - அகிலேஷ் யாதவ்

பாஜக மக்களை பற்றி கவலைப்படாமல் உணவையும், சாதியையும் கலந்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
உணவையும், சாதியையும் பாஜக ஒன்றாக கலக்குகிறது - அகிலேஷ் யாதவ்
Published on

லக்னோ

மக்களின் வலி அறியாமல் இருப்பதோடு, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பாஜக வாக்குறுதிகளை மறந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நேற்று அடிமட்ட தொண்டர் ஒருவரின் வீட்டில் அமித் ஷாவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உணவருந்தினர், இதைக் குறித்தே அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறினார்.

மூன்றாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும் சமஜ்வாடி ஆட்சியில் அமைக்கப்பட்ட அதிவிரைவு சாலையான யமுனா அதிவிரைவு சாலை போன்ற ஒன்றை அமைக்க முடியவில்லை என்றார் அகிலேஷ். அச்சாலையில் போர் விமானங்கள் கூட தரையிறங்கலாம் என்றார் அவர். நாங்கள் மத்திய அரசின் உதவியின்றி லக்னோவில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நிறைவேற்றினோம். மத்திய அரசு திட்டத்தை தாமதப்படுத்தாமல் இருந்திருந்தால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து கொண்டிருப்பார்கள் என்றார் அகிலேஷ். அதேபோல வாரணாசியை ஜப்பானின் கியாட்டோ நகரம் போல மாற்றும் வாக்குறுதியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றார் அவர்.

இவற்றையெல்லாம் தவிர்த்து பாஜக மதவாத சாதியவாத அரசியலில் ஆர்வம் கொண்டு மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, பிரிவினையை உருவாக்குகிறது என்று குற்றஞ்சாட்டினார் அகிலேஷ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com