பாஜக ஸ்தாபன தினம்: தேசம் முதலில் - தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து

கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாஜக ஸ்தாபன தினம்: தேசம் முதலில் - தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியா முதலில் என்ற கொள்கையின் வழிகாட்டுதலுடன், நமது கட்சி எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்து வருகிறது. நமது தொண்டர்கள் தங்களின் தன்னலமற்ற சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நல்லாட்சியின் மீதான ஆழ்ந்த பேரார்வத்திற்காக அறியப்படுகிறார்கள்.

தொண்டர்கள் அடிமட்ட அளவில் அயராது உழைத்து, அதிகபட்ச மக்கள் நமது சித்தாந்தத்துடனும் பணிகளுடனும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். பல தசாப்தங்களாக கட்சியின் வளர்ச்சிக்கு வடிவம் கொடுத்த எண்ணற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சியையும் நாம் நினைவுகூர்கிறோம்.

பாஜக, மக்களின் நலனை தனது தொலைநோக்கு பார்வையின் மையமாக வைக்கும் ஒரு கட்சியாக திகழ்கிறது. இது மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் நமது பணிகளில் பிரதிபலிக்கிறது.

வளர்ச்சிமிக்க இந்தியா உருவாக்குவதில் பாஜக உறுதியாக உள்ளது. நமது கூட்டு உறுதிப்பாடு இந்த தொலைநோக்கு பார்வையை தொடர்ந்து முன்னெடுத்து சென்று, இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com