

புதுடெல்லி,
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் பெதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதெடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மந்தநிலையை எட்டியுள்ளதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கணிப்பு சிறப்பாக சொல்லும்படி இல்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி இந்த நிலையில் நீடித்தால் வர்த்தகர்கள், ஏழைகள், தினக் கூலிகள் உள்ளிட்டேர் கடுமையாக பாதிக்கப்படுவர். அரசுக்கு இந்த பிரச்சினையில் தெளிவான இலக்கு இல்லை. பா.ஜ.க. அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.