தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது பா.ஜ.க. அரசு - கார்கே குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ஏற்றுமதி 153 சதவீதமாக அதிகரித்திருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது பா.ஜ.க. அரசு - கார்கே குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே, நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களை ஏற்றுமதி செய்வதற்கு பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் மகத்தான விளைச்சலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய விரும்பும்போது, மோடி அரசாங்கம் கோதுமை, அரிசி, சர்க்கரை, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை தடை செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 153 சதவீதம் அதிகரித்த விவசாய ஏற்றுமதி, பா.ஜ.க. ஆட்சியில் வெறும் 64 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

பா.ஜ.க. தனது பதவிக் காலம் முழுவதும் விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

மோடி அரசாங்கத்தின் "எம்.எஸ்.பி. மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" போலியானது. நாட்டிலுள்ள 64 கோடி விவசாயிகளின் முதுகை உடைக்க எந்தக் கல்லையும் விட்டு வைக்காத பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரானது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com