பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர சிங்

பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். #Kashmir #JitendraSingh
பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர சிங்
Published on

ஜம்மு,

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பேசுகையில், பாரதீய ஜனதா அரசு காஷ்மீர் விவகாரத்தில் மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற தவறான செய்தி மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மையில் ஒருபோதும் அரசு சமரசம் செய்யாது என குறிப்பிட்டு உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் ரமலான் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் தொடருமா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், இதில் இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம்தான் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், துரதிஷ்டவசமாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசு மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற செய்தி வெளியாகி வருகிறது. இதை தவிர்த்து இருக்கலாம் என நீங்கள் உணரும் நாள் வரும். பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மை என்பதில் எந்தஒரு சமரசமும் கிடையாது. பயங்கரவாதிகளை எதிர்க்கொள்வதில் மென்மையான போக்கு கிடையாது. இவ்விவகாரத்தில் எங்களுக்கென யுத்திகள் உள்ளது, என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com