

மும்பை
அக்கொள்கையை இன்று வரை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்று ஷா எடுத்துரைத்தார்.
பாஜக நடத்திய பொதுமக்கள் தொடர்ப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திரம் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டது காங்கிரஸ் கட்சி. சுதந்திரம் பெற்றதுடன் அதன் தேவை முடிந்துவிட்டது. அதன் பிறகு கொள்கைகளை இழந்து இப்போது வெறும் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்றார் ஷா.
ஆனால் அதற்கு நேர்மாறாக ஜனசங்கம், தேசம் முதல், கட்சி இரண்டு, தனிநபர் மூன்றாவது எனும் கோட்பாடுகளின் வழியாக இன்றும் செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
சோனியா பதவி விலகினால் அடுத்ததாக யார் காங்கிரஸ் தலைவர் ஆவார் என்பதை அனைவரும் அறிவார்கள். யாராவது பாஜகவின் அடுத்தத் தலைவர் யார் என அறிவார்களா? என்று கேட்ட அமித் ஷா, அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஏனெனில் எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகமுள்ளது என்று கூறினார்.