அயோத்தி ராமர் கோவிலை பா.ஜனதா வணிகமயமாக்கி விட்டது - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் ஆன்மிக மையமாகும்
அயோத்தி ராமர் கோவிலை பா.ஜனதா வணிகமயமாக்கி விட்டது - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
Published on

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு தொடர்பாக உத்தரபிரதேச அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், இந்துக்களின் உணர்வுகளுடன் விளையாடி பா.ஜனதா துரோகம் செய்து விட்டதாக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் பாஜனதா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் பர்பானியில் நிருபர்களிடம் கூறியதா வது:-

அயோத்தி ராமர் கோவில் என்பது ஒட்டுமொத்த இந்துக்களின் ஆன்மிக மையமாகும். பல ஆண்டுகால நெடிய போராட்டத்திற்கு பிறகு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. முன்பு 'அதே இடத்தில் கோவில் கட்டுவோம்' என்று முழக்கமிட்ட பா.ஜனதா, தற்போது இந்த கோவிலை ஒரு கடையாக மாற்றி வணிகமயமாக்கி விட்டது.

பா.ஜனதா தலைவர்கள் இந்துத்துவா கொள்கைக்கு பச்சை துரோகம் இழைத்துவிட்டனர். ராமர் கோவில் நிதியில் முறைகேடு செய்யத்தான் அவர்கள் கோவில் கட்ட ஆசைப்பட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com