பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பீகாரில் எஸ்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்தி பாஜக பெரிய அரசியல் மோசடியைச் செய்துள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
Published on

லக்னோ,

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது;

பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி. பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்துள்ளது. பீகாரில் செயல்படுத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது. ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. சிசிடிவி கேமராவை போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசட.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com